யப்பானிய மக்கள் ஒவ்வோராண்டும் வசந்த காலத்தை காமத் திருவிழாக்கள் மூலமாக வரவேற்பார்கள். இந்தக் காமத் திருவிழாக்கள் வழமையாக மார்ச் மாத நடுப் பகுதியில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.
இந்தக் காமத் திருவிழாக்கள் இரு வகையானவை. ஒன்று ஆண் உறுப்புத் திருவிழா. மற்றையது பெண் உறுப்புத் திருவிழா. இந்த உறுப்புக்களுக்கு கோவில்கள் உண்டு.
திருவிழாக் காலங்களில் கடவுள்களுக்குரிய அந்தஸ்தும் , மரியாதையும், கௌரவமும் வழங்கப்பட்டு இந்த உறுப்புக்கள் வழிபடப்படும். இந்த உறுப்புக்களின் திருப்பவனியும் இடம்பெறும். பால், வயது, சமய வேறுபாடுகள் இன்றி யப்பானியர்கள் அனைவருமே இந்த விழாக்களில் தவறாது கலந்து கொள்வார்கள்.
திருவிழாக்கள் இடம்பெறும் இடங்களில் ஆண் உறுப்புக்கள், பெண் உறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவிலான ஏராளமான பொருட்களை அங்கு காண முடியும். இந்த உறுப்புக்களின் வடிவிலான பொருட்கள்,இனிப்புக்கள் போன்றன அமோகமாக விற்பனை ஆகும். இந்தத் திருவிழாக்கள் 1500 வருடங்கள் வரை பழைமையானவை.
யப்பான் முந்தைய நாட்களில் விவசாய நாடாக இருந்துள்ளது. எனவே செழிப்பான அறுவடையைக் கோரியும்,பிள்ளை வரம் கோரியும் இந்த உறுப்புக்களை அவர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விழாக்களாகவும் இவை உள்ளமை வெளிப்படை. அத்துடன் இந்த விழாக்கள் இடம்பெறும் நகரங்களுக்கு அமோக வருமானமும் கிடைக்கப் பெறுகின்றது.
யப்பானின் ஆண் உறுப்புத் திருவிழா Komaki City's Tagata shrine ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ஆம் திகதி இவ்விழா இடம்பெறுகின்றது.அதேபோல இந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் ஆணுறுப்புத் திருவிழாவை அண்மித்த நாட்களில் பெண் உறுப்புத் திருவிழா இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள்.ஆரோக்கியமான குழந்தைகளை வேண்டி வழிபாடு இயற்றுவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். சிறுவர்கள் அதிகாலையில் பெண் உறுப்பின் வடிவத்திலான சொருபங்களை பெண் உறுப்பு ஆலயத்துக்கு கொண்டு செல்வார்கள்.
அதன் பின் சுமார் 40 பேர் கொண்ட வாலிபர் குழு ஒன்று பிரமாண்டமான பெண் உறுப்பு சொருபத்தை ரதம் அல்லது பல்லக்கு மாதிரியான ஒன்றில் வைத்து தூக்கிக் கொண்டு செல்வார்கள்.இவர்களுக்குப் பின்னால் பெண் உறுப்புக்களில் சிறிய சொருபங்கள் இரண்டு தனித் தனியாக சுமந்து வரப்படும்.
நன்றி: தமிழ் CNN
Saturday, July 31, 2010
Tuesday, July 27, 2010
கூட்டணிக்கு கட்டுப்பாடு வருமா?
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரம் காட்ட இருக்கின்றன. பொதுவாக, தற்போது கட்சிகள் அமைக்கும் கூட்டணிகள், கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல்,பல்வேறு சுயநல அடிப்படையில் மட்டுமே உருவாவதும், தேர்தலுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டணிக் கட்சிகள் எதிரெதிராக மாறுவதும் சகஜமாகிவிட்டன.இதன் காரணமாக,வாக்காளர்களின் உண்மையான விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய முறையற்ற கூட்டணிகள் அமைவதை நமது சட்டங்களால் தடுக்க முடியாததால், தேர்தல்கள் மூலம் ஒருவித போலி ஜனநாயகமே நமக்குக் கிடைக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, அத்தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட விரும்பும் கட்சிகள், தமது கூட்டணியின் பெயர், கொள்கைகள், தலைமை, பங்குபெறும் கட்சிகள் போன்ற தகவல்களை குறித்த காலத்திற்குள் தேர்தல் கமிஷனிடம் முறையாக தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிறகு, கூட்டணிக்குள் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கக்கூடாது.தேர்தல் கமிஷனிடம் கூட்டணி குறித்த தகவல்களைத் தெரிவிக்காத கட்சிகள்,பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
கூட்டணி அமைத்த பிறகு கூட்டணிக்கென்று பொதுவான தேர்தல் அறிக்கையை மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று,கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்,கூட்டணிக்கென ஒதுக்கப்படும் பொதுவான சின்னத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் வேட்பாளர்கள், அக்கூட்டணியின் வேட்பாளர்களாக மட்டுமே கருதப்பட வேண்டுமேயொழிய,தமது கட்சியின் வேட்பாளர்களாகக் கருதப்படக்கூடாது.
தேர்தலின் மூலம்,ஒரு கூட்டணியின் சார்பாக,மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம்)தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்,அச்சபையில் கூட் டணியின் உறுப்பினர்களாக மட்டுமே கருதப்பட வேண்டும்.
ஒரு கூட்டணியிலிருந்து, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் வெளியேற விரும்பினால்,கட்சித்தாவல் என கருதப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்படும் விதத்தில் நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.
இத்தகைய விதிமுறைகளை அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பது மக்களாட்சிக்கு எதிரான அவலங்களை தெரிந்தே அனுமதிப்பதற்கு ஒப்பான செயல்!
- ப. அருண்மணி,சேலம்-9.
நன்றி: குமுதம்

Tuesday, July 20, 2010
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு
நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.
பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம்.
இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.
தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது. இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும்.
இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நன்றி: கீற்று

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி
பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.
நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

Monday, July 19, 2010
Subscribe to:
Posts (Atom)