Thursday, June 17, 2010

டவுட் தனபாலு

காங்கிரஸ் கட்சி மனித உரிமைத்துறை செயலர் மிட்டல்: போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் போது, வாரன் ஆன்டர்சன் தப்பிக்க அனுமதி கொடுக்காமல் இருந்தால், கோபத்தில் இருந்த மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பர்; அதனால், அவர் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, ஆன்டர்சன் மீது, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, இழப்பீடு பெறப்பட்டது.

டவுட் தனபாலு: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, கசாப் மீதும் பொதுமக்கள் கோபத்தில் இருக்காங்க... அதனால, அவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு, அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தண்டனையோ, இழப்பீடோ பெற்றுத் தந்திடுங்களேன்...!

Monday, June 14, 2010

Photoon

சோனியாஜி, நல்லா இருக்கீங்களா..? நம்ப ஆளுங்க மந்திரியானா கொஞ்சம் அப்பிடி இப்படி இருப்பாங்க ...மன்மோகன் ஜி கிட்டே அதையெல்லாம் கண்டுக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போக சொல்லுங்க .....இத போன்ல சொன்ன நல்லா இருக்காதுன்னுதான் நேர்ல சொல்லலாம்னு வந்தேன்.

Tuesday, June 01, 2010

Cartoon

டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற முடிவை தீர்மானமாக நிறைவேற்றி இருந்தனர். இந்த தீர்மானம் குறித்து, நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்வரைச் சந்தித்து பல விஷயங்களை பேசினோம்.
டவுட் தனபாலு: கூட்டணி வேணும்னு உங்க நிறுவனர் எழுதிய இரண்டு கடிதங்களையும், தேதி வாரியாக, தி.மு.க., உயர்மட்டக்குழு தீர்மானத்தில சொல்லிட்டாங்களே... அதுக்கப்பறமும், "மீசையில் மண் ஒட்டாத' கதையா, கூட்டணிக்காக ஏதோ, அவங்க தீர்மானம் போட்டதால் தான், நீங்க ஒத்துக்கிட்ட மாதிரி, "பில்டப்' பண்றீங்களே!