பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக்  கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற முடிவை  தீர்மானமாக நிறைவேற்றி இருந்தனர். இந்த தீர்மானம் குறித்து, நிர்வாகக் குழு  கூட்டத்தில் விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்வரைச்  சந்தித்து பல விஷயங்களை பேசினோம். 
டவுட் தனபாலு: கூட்டணி வேணும்னு உங்க நிறுவனர் எழுதிய இரண்டு  கடிதங்களையும், தேதி வாரியாக, தி.மு.க., உயர்மட்டக்குழு தீர்மானத்தில  சொல்லிட்டாங்களே... அதுக்கப்பறமும், "மீசையில் மண் ஒட்டாத' கதையா,  கூட்டணிக்காக ஏதோ, அவங்க தீர்மானம் போட்டதால் தான், நீங்க ஒத்துக்கிட்ட  மாதிரி, "பில்டப்' பண்றீங்களே!
 
 
No comments:
Post a Comment