Tuesday, September 14, 2010

Employment registration

நாளை முதல் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு

சென்னை, செப். 14: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in 

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை 

1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம். 

2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம். 

3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். 

4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம் 

6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன. 

நன்றி: தினமணி 

Tuesday, August 31, 2010

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் மற்றும் படிகள் விவரங்கள்


நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 3 மடங்கு உயர்த்தும் சட்டம் நிறைவேறியது!  
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.16,000த்திலிருந்து ரூ.50,000 ஆகவும்,  நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றால் நாளொன்றுக்கு அளிக்கப்படும் தினப்படி ரூ.1,000த்திலிருந்து ரூ.2,000 ஆகவும், இதர படிகளை பன்மடங்கு உயர்த்த வழிவகை செய்யும் சட்ட வரைவு மக்களவையில் நிறைவெறியது.
நாடாளும்ன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் (திருத்த) சட்ட வரைவு 2010 மக்களவை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டப் பிறகு இது சட்டமாகும். 
இச்சட்ட வரைவு நிறைவேற்றத்தின் படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெறும் ஊதியம் மற்றும் படிகள் விவரங்கள் வருமாறு:
1. மாத ஊதியம் - ரூ.50,000.00
2. தினப்படி - ரூ.2,000.00
3. தொகுதிப்படி (ஒரு மாதத்திற்கு) - ரூ.45,000.00
4. அலுவலக செலவுப்படி (மாதத்திற்கு) - ரூ.45,000.00
5. போக்குவரத்து செலவு (ஆண்டிற்கு) - ரூ.4,00,000.00
6. ஓய்வூதியம் (மாதத்திற்கு) - ரூ.20,000.00 
மேற்கண்ட கணக்குப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 3 மடங்கும், தினப்படி 2 மடங்கும், தொகுதிப் படி இரண்டரை மடங்கும், அலுவலகப்படி இரண்டரை மடங்கும், போக்குவரத்து செலவுப்படி 4 மடங்கும், ஓய்வூதியம் இரண்டரை மடங்கும் எந்த வித எதிர்ப்போ சிக்கலோ இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த உயர்வு அனைத்தும் மே மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளார். எனவே அனைவருக்கும் 3 மாத பாக்கித் தொகையாக பெரும் தொகை கிடைக்கும். இதனால் மட்டும் நாட்டிற்கு ரூ.118 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 3 மடங்கு உயர்த்தும் சட்டம் நிறைவேறியது!  

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.16,000த்திலிருந்து ரூ.50,000 ஆகவும்,  நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றால் நாளொன்றுக்கு அளிக்கப்படும் தினப்படி ரூ.1,000த்திலிருந்து ரூ.2,000 ஆகவும், இதர படிகளை பன்மடங்கு உயர்த்த வழிவகை செய்யும் சட்ட வரைவு மக்களவையில் நிறைவெறியது.

நாடாளும்ன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் (திருத்த) சட்ட வரைவு 2010 மக்களவை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டப் பிறகு இது சட்டமாகும். 

இச்சட்ட வரைவு நிறைவேற்றத்தின் படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெறும் ஊதியம் மற்றும் படிகள் விவரங்கள் வருமாறு:

1. மாத ஊதியம் - ரூ.50,000.00
2. தினப்படி - ரூ.2,000.00
3. தொகுதிப்படி (ஒரு மாதத்திற்கு) - ரூ.45,000.00
4. அலுவலக செலவுப்படி (மாதத்திற்கு) - ரூ.45,000.00
5. போக்குவரத்து செலவு (ஆண்டிற்கு) - ரூ.4,00,000.00
6. ஓய்வூதியம் (மாதத்திற்கு) - ரூ.20,000.00 

மேற்கண்ட கணக்குப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 3 மடங்கும், தினப்படி 2 மடங்கும், தொகுதிப் படி இரண்டரை மடங்கும், அலுவலகப்படி இரண்டரை மடங்கும், போக்குவரத்து செலவுப்படி 4 மடங்கும், ஓய்வூதியம் இரண்டரை மடங்கும் எந்த வித எதிர்ப்போ சிக்கலோ இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த உயர்வு அனைத்தும் மே மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளார். எனவே அனைவருக்கும் 3 மாத பாக்கித் தொகையாக பெரும் தொகை கிடைக்கும். இதனால் மட்டும் நாட்டிற்கு ரூ.118 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: நாம் தமிழர்

Saturday, July 31, 2010

பாலியல் உறுப்புகளுக்கு யப்பானில் திருவிழா! (அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்)

யப்பானிய மக்கள் ஒவ்வோராண்டும் வசந்த காலத்தை காமத் திருவிழாக்கள் மூலமாக வரவேற்பார்கள். இந்தக் காமத் திருவிழாக்கள் வழமையாக மார்ச் மாத நடுப் பகுதியில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.


இந்தக் காமத் திருவிழாக்கள் இரு வகையானவை. ஒன்று ஆண் உறுப்புத் திருவிழா. மற்றையது பெண் உறுப்புத் திருவிழா. இந்த உறுப்புக்களுக்கு கோவில்கள் உண்டு.

திருவிழாக் காலங்களில் கடவுள்களுக்குரிய அந்தஸ்தும் , மரியாதையும், கௌரவமும் வழங்கப்பட்டு இந்த உறுப்புக்கள் வழிபடப்படும். இந்த உறுப்புக்களின் திருப்பவனியும் இடம்பெறும். பால், வயது, சமய வேறுபாடுகள் இன்றி யப்பானியர்கள் அனைவருமே இந்த விழாக்களில் தவறாது கலந்து கொள்வார்கள்.

திருவிழாக்கள் இடம்பெறும் இடங்களில் ஆண் உறுப்புக்கள், பெண் உறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவிலான ஏராளமான பொருட்களை அங்கு காண முடியும். இந்த உறுப்புக்களின் வடிவிலான பொருட்கள்,இனிப்புக்கள் போன்றன அமோகமாக விற்பனை ஆகும். இந்தத் திருவிழாக்கள் 1500 வருடங்கள் வரை பழைமையானவை.


யப்பான் முந்தைய நாட்களில் விவசாய நாடாக இருந்துள்ளது. எனவே செழிப்பான அறுவடையைக் கோரியும்,பிள்ளை வரம் கோரியும் இந்த உறுப்புக்களை அவர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விழாக்களாகவும் இவை உள்ளமை வெளிப்படை. அத்துடன் இந்த விழாக்கள் இடம்பெறும் நகரங்களுக்கு அமோக வருமானமும் கிடைக்கப் பெறுகின்றது.

யப்பானின் ஆண் உறுப்புத் திருவிழா Komaki City's Tagata shrine ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ஆம் திகதி இவ்விழா இடம்பெறுகின்றது.அதேபோல இந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் ஆணுறுப்புத் திருவிழாவை அண்மித்த நாட்களில் பெண் உறுப்புத் திருவிழா இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள்.ஆரோக்கியமான குழந்தைகளை வேண்டி வழிபாடு இயற்றுவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். சிறுவர்கள் அதிகாலையில் பெண் உறுப்பின் வடிவத்திலான சொருபங்களை பெண் உறுப்பு ஆலயத்துக்கு கொண்டு செல்வார்கள்.

அதன் பின் சுமார் 40 பேர் கொண்ட வாலிபர் குழு ஒன்று பிரமாண்டமான பெண் உறுப்பு சொருபத்தை ரதம் அல்லது பல்லக்கு மாதிரியான ஒன்றில் வைத்து தூக்கிக் கொண்டு செல்வார்கள்.இவர்களுக்குப் பின்னால் பெண் உறுப்புக்களில் சிறிய சொருபங்கள் இரண்டு தனித் தனியாக சுமந்து வரப்படும்.



நன்றி: தமிழ் CNN

Tuesday, July 27, 2010

கூட்டணிக்கு கட்டுப்பாடு வருமா?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரம் காட்ட இருக்கின்றன. பொதுவாக, தற்போது கட்சிகள்  அமைக்கும் கூட்டணிகள், கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல்,பல்வேறு சுயநல அடிப்படையில் மட்டுமே உருவாவதும், தேர்தலுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள்  காரணமாக கூட்டணிக் கட்சிகள் எதிரெதிராக மாறுவதும் சகஜமாகிவிட்டன.இதன் காரணமாக,வாக்காளர்களின் உண்மையான விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில்  வெளிப்பட முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய முறையற்ற கூட்டணிகள் அமைவதை நமது சட்டங்களால் தடுக்க முடியாததால், தேர்தல்கள் மூலம் ஒருவித போலி  ஜனநாயகமே நமக்குக் கிடைக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, அத்தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட விரும்பும் கட்சிகள், தமது கூட்டணியின் பெயர், கொள்கைகள், தலைமை, பங்குபெறும் கட்சிகள் போன்ற தகவல்களை குறித்த காலத்திற்குள் தேர்தல் கமிஷனிடம் முறையாக தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிறகு, கூட்டணிக்குள் எவ்வித  மாற்றத்தையும் அனுமதிக்கக்கூடாது.தேர்தல் கமிஷனிடம் கூட்டணி குறித்த தகவல்களைத் தெரிவிக்காத கட்சிகள்,பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட அனுமதிக்கக்  கூடாது.

கூட்டணி அமைத்த பிறகு கூட்டணிக்கென்று பொதுவான தேர்தல் அறிக்கையை மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று,கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்,கூட்டணிக்கென ஒதுக்கப்படும் பொதுவான சின்னத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு  கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் வேட்பாளர்கள், அக்கூட்டணியின் வேட்பாளர்களாக மட்டுமே கருதப்பட வேண்டுமேயொழிய,தமது கட்சியின் வேட்பாளர்களாகக்  கருதப்படக்கூடாது.

தேர்தலின் மூலம்,ஒரு கூட்டணியின் சார்பாக,மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம்)தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்,அச்சபையில் கூட் டணியின் உறுப்பினர்களாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

ஒரு கூட்டணியிலிருந்து, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் வெளியேற விரும்பினால்,கட்சித்தாவல் என கருதப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்படும் விதத்தில்  நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பது மக்களாட்சிக்கு எதிரான அவலங்களை தெரிந்தே அனுமதிப்பதற்கு ஒப்பான செயல்!

- ப. அருண்மணி,சேலம்-9.

நன்றி: குமுதம்

Tuesday, July 20, 2010

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு

நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.

பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம்.

இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.

தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது. இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும்.

இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.



நன்றி: கீற்று