நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது.  பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில்  உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள்  குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள்  திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக  பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.
பூண்டில் காணப்படும்  வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து  தயாரிக்கப்படுகிறதாம்.
இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின்  கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை  நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக  வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் கணையநீரில்  உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு  நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம்  உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.
தசைகள், கொழுப்பு, கல்லீரல்  இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது.  நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை  சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது. இந்தவகை நோயாளிகள் மருந்துடன்,  உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம்  வகை நீரிழிவுநோய் எனப்படும்.
இவர்கள் சாப்பிடும் மருந்துகளால்  பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு  பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நன்றி: கீற்று 
 
No comments:
Post a Comment