Tuesday, July 13, 2010

கற்ப மூலிகை

 
கற்றாழை

கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை, செங்கற்றாழை, என பல வகைகள்உள்ளன. இதில் சிறு கற்றாழையும், சோற்றுக் கற்றாழையும் ஒரே வகையைச்சார்ந்தவை. இவை இந்தியா முழுவதும் ஆற்றங்கரையிலும் சதுப்பு நிலங்களிலும்,புஞ்சை காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வளர்கிறது.

பொதுவாக கற்றாழையின் பயன்பாடு அனைத்து மருத்துவத் துறைகளிலும் உள்ளது.இவை என்றும் இளமைத் தோற்றத்தைத் தருவதால் இதனை குமரி என்றும், கன்னிஎன்றும் அழைக் கின்றனர்.

தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுவதால் இதனை குமரி என்று அழைப்பதாக சிலர் கூறுகின்றனர்.

இந்த வகைக் கற்றாழைகளில் சிவப்புக் கற்றாழை கிடைப்பது மிகவும் அரிது. இதன்சிறப்புகள் பற்றி எல்லா சித்தர்களும் பாடியுள்ளனர். கற்றாழையின்மருத்துவக் குணங்கள் பற்றி தேரன் வெண்பாவில்

வற்றாக் குமரிதன்னை வற்றலென வுண்ணினுஞ்சீர்

முற்றாக் குமரியென மூளுமே - நற்றாக்குந்

திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலு

முண்மைமிகு நூறாமா யுள்

கற்றாழையை முறைப்படி உலர்த்தி வற்றலாக்கி பொடி செய்து அதனுடன் தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் நூற்றாண்டுக்கு மேல்வாழலாம்.

குமரியின் வற்றலும் கொளப்பிணி யகலும்

-தேரையர் குணபாடம்

கற்றாழையை வற்றலாக்கி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்என்றும் நம்மை அணுகாது. கற்றாழையை மேற்கண்டபடி கற்பம் செய்து சாப்பிட்டுவந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.

பொன்னாங்கண்ணி

மேனியை பொன் போல் ஆக்கும் தன்மை கொண்டதால் இதனை பொன்னாங்கண்ணி என்றுஅழைக்கின்றனர். பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்காணி என்றே சித்தர்கள் இதனைவிளக்குகின்றனர். இதனை தங்கக் கீரை என்றும் அழைக்கின்றனர்.

பொன்னாங்கண்ணியில் இருவகைகள் உள்ளன.

நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி. இது படர்பூண்டு வகையைச்சார்ந்தது. இந்தியா முழுவதும் வயல் வரப்புகளிம், தோட்டங்களிலும் பரந்துகாணப்படும். இதை காயகல்ப பூண்டு என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.

பொன்னாங்கண்ணி கற்பம்

பொன்னாங்கணிக் கீரை போற்றியுணக் கற்பமுறை

பொன்னாங்கணிக் கீரை போதுமோ-பொன்னா

யிருப்தி லக்கமதி யேற்பத் தியத்தை

யிருப்தி லக்க மதியே

- தேரையர் குணபாடம்

பொருள் - செழிப்பாக வளர்ந்த பொன்னாங்கண்ணி இலையை சுத்தம் செய்து நெய்விட்டு நன்கு வதக்கி அதனுடன் மிளகு உப்பு சேர்த்து பாட்டிலில் அடைத்துவைத்துக்கொண்டு கற்ப முறைப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் ,

· உடலுக்கு வன்மையை உண்டாக்கும்.

· மேனி பொன்னிறமாக மாறும்.

· நோயில்லா நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

· கண்கள் குளிர்ச்சியடைந்து பார்வை தெளிவுபெறும். இக்கற்ப மருந்தை உட்கொள்ளும் காலங்களில் உணவில் புளியைத் தவிர்க்க வேண்டும்.

· பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் உண்டு வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தடுத்து, நோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

· மேலும் கண் புகைச்சல், ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப் படுத்தும்.

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment