Tuesday, July 13, 2010

கற்பக மூலிகை - தூதுவளை



                     மிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.

காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.

இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும்.

சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையான மனதுடன்இருக்க வேண்டும். தெய்வ சிந்தனை வேண்டும். மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக கற்ப மருந்தை நல்ல நாள்பார்த்து சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் சிறியதாக உட் கொள்ளும் மருந்தைநாட் செல்லச் செல்ல அதிகரிக்க வேண்டும். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள்சாப்பிட வேண்டும்.

இக்காலங்களில் புளியை நீக்குவது நல்லது. மேலும் அகப் பத்தியம் என்றுஅழைக்கப்படும் ஆண் பெண் சேர்க்கையை தவிர்க்க வேண்டும். மது, புகை, போதைப்பொருட்களை அறவே தொடக் கூடாது.


தூதுவளை

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.

தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய

வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே

(தேரையர் காண்டம்)

தூதுவளைக் கற்பம்

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.

தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.

தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

மேற்கண்ட கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

வில்வம்

வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்துநோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும்காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜைசெய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு.

இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

வில்வ கற்பம்

பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே

வல்லவம் மேகமந்த மாகுன்மம்-செல்லுகின்ற

நோக்மருள் விந்துநட்ட நூறு மகுத்தவர்கட்

காக்கமருள் வில்லுவத்தி லாம்

(அகத்தியர் குணபாடம்)

பொருள் - வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும்.

வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும்.

பிஞ்சு - குன்மத்தை போக்கும்

பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும்.

வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம்காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால்காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.

வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.

வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.

வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

மாதூரத் தாலை மடக்கஞர்போ மாந்தவரா

மாலுரத்தாலை மடிவபோன் - மாலுரம்

(தேரையர் நளவெண்பா)

வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.

வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சிஎட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.

வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால்உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மைநீங்கும்.

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment