Tuesday, July 13, 2010

திரிகடுகு


                      ம்முடைய மூதாதையர்கள் அன்றாட உணவு முறைகளில் கடைபிடித்து வந்த பழக்கங்களேஅவர்கள் நீடித்த திடமான ஆயுளுடன் வாழ்வதற்கு காரணம் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள். அறுசுவை உண்டி, நளபாக உணவு என்பதெல்லாம் மனிதவாழ்விற்குத் தேவையான உயிர்ச் சத்துக்கள் வேண்டிய விகிதத்தில் அமையப்பட்டிருப்பதே யாகும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவுகளை தேவையானஅளவிற்கு உண்டு வாழ்கின்றபோது நோய் நம்மை நெருங்குவ தில்லை.

ஆனால் அவரவர்கள் வாழ்கின்ற வெவ்வேறு விதமான சூழ்நிலை, வசதிகள், உழைப்புஇவைகள் காரணமாக ஒவ்வொருவருடைய உடல்நிலையிலும் வெவ்வேறு விதமான மாறுதல்கள்ஏற்பட்டு வாத, பித்த, கபம் மாறுபட்ட நிலையினை அடைகிறது. இதன் விளைவாகவேமனித இனம் நோயால் பீடிக்கப்பட்டு துன்பமடைகிறது.

இந்த நவீன யுகத்தில் நோயின்றி வாழ சித்தர்கள் கூறிய நோய் தீர்க்கும் மூலிகைகளை பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.

நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பற்றி சித்தர்கள் குறிப்பிடும்போது மூன்றுமூலிகைகளை சேர்த்து ஒரு மருந்து தயாரித்தனர். அதற்கு ‘திரி’ எனமுன்பெயரிட்டு அழைத்தனர்.

உதாரணமாக

திரிபலா - நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்

திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி

இந்த இதழில் திரிகடுகின் மருத்துவப் பயன்களை அறிந்துகொள்வோம்.

திருகடுகில் உள்ள மூன்று மூலிகைள்

1. சுக்கு

2. மிளகு

3. திப்பிலி

முதலில் ஒவ்வொன்றின் பொதுவான உபயோகங்களையும் பின் இந்த மூன்றும் ஒன்றுசேர்த்து உபயோகித்தால் கிடைக்கும் மருத்துவப் பயன்களையும் காண்போம்.

சுக்கு

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

நம் நாட்டுப்புற பழமொழியில்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை

சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை”

என்பார்கள். இதிலிருந்து சுக்கின் மகத்துவம் நமக்கு புரியவரும்.

பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறையஅஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர்.

மற்ற மருந்துகளுடன் சுக்கைச் சேர்க்கும்போது ஜுரம், ஆஸ்துமா, இருமல் போன்றவைகள் குணமாகும்.

இருதயத்துக்கு உகந்தது சுக்கு. இதனாலேயே நம் முன்னோர்கள் சுக்குக்காபி அருந்தினார்கள்.

சுக்கு நாள்பட்ட மந்தம், வயிறு உப்புசம் ஆகியவற்றை நீக்கும். இதனாலேயேஇதனை வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு, பசியின்மை ஆகியவற்றிற்குஉபயோகிப்பர்.

உபயோகிக்கும் முறை

சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் எடுத்து பொடி செய்து காலை, மாலை எனஇருவேளையும் 1 சிட்டிகை அளவு இளநீரில் கலந்து கொடுத்து வந்தால்மார்புவலி, நெஞ்வலி நீங்கும். மேல் மூச்சு வாங்குவது நிற்கும்.

சுக்கு சாரணை வேர் இவ்விரண்டையும் சம அளவு எடுத்து குடிநீராக்கி அருந்திவந்தால் மந்தம் நீங்கும்.

சுக்குத் தூளை கரும்பு சாறுடன் சேர்த்து உட்கொண்டால் வயிற்றெரிச்சல்நீங்கும். சுக்கை மென்று அதன் சாற்றை மெதுவாக தொண்டையில் இறக்கினால்தொண்டைக்கட்டு குரற்கம்மல் நீங்கும்.

மிளகு

மிளகு தென்னிந்தியாவில் கேரளம், தமிழ் நாட்டில் மலைப்பகுதியில் மேலும் கர்நாடகப் பகுதியிலும் பயிராகும் கொடி வகையாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதை ஆஸ்துமா குணமாக்கும் மூலிகையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது மிளகைத்தான்.

தற்போது உபயோகத்தில் உள்ள சளி நிவாரண மருந்துகளில் உள்ள முக்கியவேதிப்பொருள் (Guaifenesin from Guaiacol) குகைபெனின்சின். இதற்கு சமமான வேதிப்பொருள்தான் மிளகிலிருந்துஎடுக்கப்படும் (Capsaicin) கேப்சாய்சின். இதுவே தற்போது ஆங்கிலமருத்துவத்தில் உபயோகத்தில் உள்ள சளி நிவாரண மாத்திரை மற்றும்மருந்துகளில் உபயோகிக்கப் படுகிறது.

மிளகு பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. மேலும் சீரணத்தைத் அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உபயோகிக்கும் முறை

மிளகுத்தூள் 250 - 350 மி.கி. தினமும் உட்கொண்டால் பசியை நன்கு தூண்டிவிடும். வெப்பத்தை உண்டுபண்ணி புத்துணர்வை உண்டாக்கும்.

மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம்(சோம்பு), கல்லுப்பு இவற்றை ஓர்அளவாக சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் உணவுக்குப் பின்இரண்டு கிராம் அளவு உண்டு வந்தால் செரிப்புத் தன்மையை அதிகப்படுத்திவயிற்று நோயைப் போக்கும்.

மிளகு பற்பொடிக்கு ஒரு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

திப்பிலி

திப்பிலி தென்னிந்தியாவிலும், வங்காளத்தின் கீழ்ப்பகுதிகளிலும் பயிரிடப்படும் கொடி வகையாகும்.

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

உபயோகிக்கும் முறை

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.

திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

திரிகடுகு சூரணம்

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். மிளகு திப்பிலிஇரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்துஎடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடித்து பின் மூன்றையும்ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலிமற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும். 

நன்றி:  நக்கீரன்

No comments:

Post a Comment